வெப்-சீரிஸில் நடிப்பதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி ! எவ்வளவு தெரியுமா?
விஜய் சேதுபதியின் சம்பளம்
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் இவரின் திரைப்படங்கள் மாதத்திற்கு ஒரு திரைப்படமாவது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் படத்தை தொடர்ந்து அவரின் மாமனிதன் திரைப்படமும் வெளியாகியிருந்தது.
மேலும் அடுத்தும் அவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி சமீப நாட்களாக ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்திலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள வெப் சீரிஸ் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. பல மொழிகளில் உருவாகும் அந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் அந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் ரூ. 35 கோடி என தகவல் பரவி வருகிறது. இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
