அப்பாவை அம்மா இப்படி தான் அழைப்பார்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய் சேதுபதி மகன் சூர்யா
சூர்யா
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக தற்போது அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே, சூர்யா தன் அப்பாவுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார்.
வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது, இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் அப்பா விஜய் சேதுபதி குறித்தும் அவர் குடும்பம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை சூர்யா பகிர்ந்துள்ளார்.
அதில், "என் குடும்பத்தை சிறப்பாக வழி நடத்துவது என் அம்மா மற்றும் தங்கை தான். அவர்கள் இருவரும் தான் எங்கள் குடும்பத்தின் உற்சாகத்துக்கு மிக முக்கிய காரணம்.
இன்றும் என் அப்பாவை என் அம்மா 'அத்தான்' என்று தான் அழைப்பார். அவர்கள் இருவரும் மிகவும் அழகான ஜோடி" என்று குடும்பம் குறித்து பேசியுள்ளார்.

இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்: மன்னிப்புக் கோர பிரதமர் வலியுறுத்தல் News Lankasri
