வில்லன், கெஸ்ட் ரோலில் நடிப்பதை நிறுத்திட்டேன்.. விஜய் சேதுபதி சொன்ன அதிர்ச்சி காரணம்
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் வில்லனாகவும் பல படங்களில் மிரட்டி வருகிறார்.
அது மட்டுமின்றி ஏராளமான படங்களில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்து வந்தார். ஆனால் அதை எல்லாம் தற்போது நிறுத்திவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.
நிறுத்திட்டேன்
"ஒரு சில நாளில் ஷூட்டிங் செய்து கெஸ்ட் ரோலில் நடித்து கொடுப்பதால் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது என முன்பு நினைத்தேன். ஆனால் எல்லாத்துக்கும் அவரை கூப்பிடுங்க என்கிற நிலை வந்துவிட்டது."
"மேலும் எக்கச்சக்க கெஸ்ட் ரோல் படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் பிஸினஸ் பாதிக்கிறது. அதனால் அதை நிறுத்திட்டேன்."
"வில்லன் ரோலில் நடிப்பதையும் நிறுத்திக்கொண்டேன். வேண்டாம் என்றாலும் ஒருமுறை கதை கேட்டுவிட்டு சொல்லுன்னு என்கிறார்கள். அதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை" என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.