தற்காப்பு கலை கற்கும் நடிகர் விஜய் சேதுபதி.. வைரல் வீடியோ
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அதை தொடர்ந்து, விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார். இதில், மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிப்பை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கி வந்தார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி தற்காப்பு கலை கற்றுக்கொண்டுள்ளார். கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு கலையை விஜய் சேதுபதி கற்றுக்கொண்ட வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி தற்காப்புக்கலை பயிலும் வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர் எங்கு, எதற்காக இந்தக் கலையைக் கற்கிறார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. #VijaySethupathi #films #TamilCinema pic.twitter.com/GpoXoA2f25
— Win News Prime (@winnewstamil) March 7, 2025

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
