மாவீரன் படத்தில் விஜய் சேதுபதியா? ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரைலருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்க்கிறார், அந்த நேரத்தில் எல்லாம் வாய்ஸ் ஓவர் வருகிறது. அது யார் குரல் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள்.

விஜய் சேதுபதி குரலா?
படத்தில் வரும் வாய்ஸ் ஓவர் விஜய் சேதுபதியின் குரலாக இருக்கலாம் என தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களிடம் இதற்காக கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுத்ததால் இறுதியில் விஜய் சேதுபதி மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் பேசி இருக்கிறார் என கூறப்படுகிறது.
இருப்பினும் இது பற்றி படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. படம் வெளியானால் தான் அது யார் குரல் என்பது உறுதியாகும்.

வசூல் விவரம் எல்லாம் பொய்யா.. ஆதிபுருஷ் தயாரிப்பாளருக்கு மொத்தம் இத்தனை கோடி நஷ்டமா?