அஜித்துடன் நிற்பது விஜய் சேதுபதியா...சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தின் உண்மை இதுதான்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் துவங்கியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் - விஜய் சேதுபதி
ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில், நடிகர் அஜித்துடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அவர் கிடையாது
ஆனால், உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி கிடையாது. அந்த புகைப்படத்தில் அஜித்துடன் இருப்பது பிரபல நடன கலைஞரும், நடிகருமான அஜய் ராஜ் தான்.
ஆனால், அஜித்துடன் இருப்பது விஜய் சேதுபதி என பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அஜய் ராஜ் சென்னை 28 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்களில் போர் தொழில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ