நானும் சாதாரண மனிதன் தானே, எனக்கும் அது இருக்கு- விஜய் கூறிய ஒரு விஷயம்

vijay anger beast shinetomchacko
By Yathrika Mar 22, 2022 03:55 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி நடிகர்களும் வியந்து பார்க்கும் ஒரு பிரபலம். திறமையை வெளிக்காட்டி யார் எது செய்திருந்தாலும் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அடுத்த ரிலீஸ் பீஸ்ட்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவந்த படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.

இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக், அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என இரண்டு பாடல்களின் டீஸ்ர் வெளியாகிவிட்டது. ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

நானும் சாதாரண மனிதன் தானே, எனக்கும் அது இருக்கு- விஜய் கூறிய ஒரு விஷயம் | Vijay Shares Some About His Character

ஷைன் டாம் சாக்கோ

இந்த பீஸ்ட் படத்தில் எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளார், அதில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடித்துள்ளார்.

அவர் படம் குறித்து கொடுத்து ஒரு பேட்டியில், என்னுடைய அம்மா பீஸ்ட் படப்பிடிப்பிற்கு வந்தார்கள். அவர்களிடம் விஜய் சாரிடம் ஒரு விஷயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறி அவர் எப்போதும் அமைதியாகவே உள்ளார், கோபம் கொண்டதை நான் இதுவரை பார்க்கவில்லை என்றேன்.

உடனே எனது அம்மா இதுபற்றி விஜய் அவர்களிடம் கேட்டார், அதற்கு அவர், நானும் சாதாரண மனிதன் தான். எனக்கும் கோபம் வரும், ஆனால் அதை நான் கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று கூறினார்.

அதிகாரமும், பணமும் உள்ள ஒரு மனிதன் கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை, விஜய் அவர்களுக்கு சூப்பர் பவர் உள்ளது என ஷைன் டான் பெருமையாக பேசியுள்ளார்.

நானும் சாதாரண மனிதன் தானே, எனக்கும் அது இருக்கு- விஜய் கூறிய ஒரு விஷயம் | Vijay Shares Some About His Character

பாக்கியலட்சுமி தொடர் இயக்குனர் மீது போலீசில் புகார்! அதிர்ச்சி தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US