இயக்குனரிடம் கதையை மாற்ற சொல்லும் நடிகர் விஜய்.. தமிழ் திரையுலகின் பெரும் சர்ச்சை
தளபதி விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 67 உருவாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து விஜய்யின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் மீது இருந்த பெரும் சர்ச்சைகளில் ஒன்று, இயக்குனரிடம் கதையை கேட்டுவிட்டு தனக்கு பிடித்தது போல் கதையை மாற்ற சொல்வார் என்பது தான். இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் கூட ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பெரும் சர்ச்சை
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள விஜய், " கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை மாற்ற நான் சொல்ல மாட்டேன். அதை சொல்லவும் எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு எனக்கு Knowledge கிடையாது. ஒரு சில படங்கள் பண்ணும்போது மட்டும் தான், என்னுடைய ரசிகர்களுக்காக ஒரு குத்து பாடல் வேண்டும் என்று கேட்பேன். ஒரு மாஸ் சண்டை காட்சி வேண்டும் என்று கேட்பேன், அவ்வளவுதான். எனக்கு கதையை இப்படி திருப்பி போடு. இந்த சீனை இப்படி மாற்று என்று சொல்ல தெரியாது " என்று கூறியுள்ளார்.
இதை சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்றபோது பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.