அரசியல் பிரச்சனை.. பல தடைகளை தாண்டி வெளிவந்த தலைவா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
விஜய்யின் தலைவா
ஏ.எல். விஜய் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அமலா பால், சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாவதாக இருந்த இப்படம் சில அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸ் ஆனது.
மொத்த வசூல்
இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருந்தனர். அப்படி அரசியல் பிரச்சனையில் சிக்கியும், பல எதிர்ப்புகளை தாண்டி 10 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் வெளிவந்த தலைவா திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில், இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தலைவா திரைப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை! போனில் இப்படி கேட்பார்களா

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
