லைகர் படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் ! வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் பதிவு
லைகர்
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் லைகர்.
ஆக்ஷன் திரைப்படமான லைகர் இந்தியளவில் ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் இன்று வெளியானது முதல் அதிகமாக மோசமான விமர்சனங்களையே பெற்று வருகிறது. பெரிய வசூல் சாதனைகளை இப்படம் நிகழ்த்தாது என்றும் சொல்லப்படுகிறது.
200 கோடி வசூல்
இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவின் பழைய டிவிட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், கடந்த வருடம் விஜய் தேவரகொண்டா டிவிட்டரில் லைகர் திரைப்படத்தை ரூ. 200 கோடி கொடுத்து பிரபல OTT நிறுவனம் வாங்க உள்ளது என்ற தகவலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு விஜய் தேவரகொண்டா “மிகவும் குறைவு, நான் இதை விட அதிகமாக வசூல் செய்வேன்” என பதிவிட்டு இருக்கிறார்.
ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய நடிகர் நடித்து முடித்த காட்சி

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
