தல, தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு.. அதுவும் வில்லன் ரோலில்
நடிகர் விஜய்
ரசிகர்களால் தளபதி என கொண்டாப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் ஜெய் நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்கப்போகும் நபர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தல, தளபதி கூட்டணி
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக தல - தளபதி இணைகிறார்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தான நடிகரை விரும்பும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, திருமணம் செய்ய ஆசையாம்..
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri