10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஏற்பாடு செய்த நடிகர் விஜய் !! எப்போது தெரியுமா
விஜய் மக்கள் இயக்கம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். இது இவரின் அரசியல் பிரவேசத்திற்கு முதல் அடி என அனைவராலும் பேசப்பட்டது.
விஜய் செய்த ஏற்பாடு
இந்நிலையில் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ம் தேதி அன்று சந்திக்கிறார்.
அப்போது தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்போகிறார்.
இது சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறுவதாகவும் மேலும் அங்கு அவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்போவதாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை சுவாதியா இது?- திருமணம், குழந்தை என எப்படி உள்ளார் பாருங்க

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
