திடீரென முடிவுக்கு வந்து விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல்... கிளைமேக்ஸ் காட்சி இதோ
ஆஹா கல்யாணம்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் இப்போது சீரியல்களும் கெத்தாக ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என தொடர்ந்து நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
முடிந்த தொடர்
அது என்ன சீரியல் என்றால் ஆஹா கல்யாணம் தான். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் கொண்டாடும் தொடராக இருந்தது.
644 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் ஆக்டோபர் 3ம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது. மஹாவின் வளைகாப்பு நிகழ்ச்சியோடு இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
மிகவும் அழகான சீரியல், இந்த முடிவு சோகத்தை கொடுக்கிறது என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.