விஜய் டிவி நடிகர் புகழின் தந்தை காலமானார்.. அதிர்ச்சி செய்தி
நடிகர் புகழ்
விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் புகழ். இவர் சிரிச்சா போச்சு மூலம் என்ட்ரி கொடுத்து பின் குக் வித் கோமாளி மூலம் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார்.

குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2ல் கலக்கிய புகழுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அயோத்தி, 1947, யானை என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
புகழின் தந்தை
இன்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள புகழ் தனது சமூக வலைத்தளத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை மனமுடைந்து பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் புகழின் தந்தைக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், புகழுக்கு ஆறுதலையும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.