தோல்வியில் முடிந்த ஒருதலை காதல்.. மன அழுத்தத்தில் பிரபல சீரியல் நடிகர் எடுத்த முடிவு
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஒரு ரோலில் நடித்து இருந்தவர் ராகவேந்திரன் புலி. அவர் தன் ரோலுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை, சம்பளம் மிக குறைவாக தருகிறார்கள் என சொல்லி சீரியலில் இருந்து விலகினார். மேலும் இனி நடிக்கவே மாட்டேன் என்றும் பேட்டி அளித்தார்.
இந்நிலையில் அவர் ஒருதலையாக காதலித்த நிலையில் அது தோல்வி ஆனதால் மன அழுத்தத்தில் இருப்பதாக ராகவேந்திரன் புலி இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் தற்போது பார்ட் டைமில் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
"ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடமும் டேமேஜ் ஆகிவிட்டது" என இன்ஸ்டாவில் போடோவுடன் பதிவிட்டு இருக்கிறார் அவர்.