மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம்.. யார் தெரியுமா
சிவகாத்திகேயனின் மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜா சில நாட்களுக்கு முன் நடந்தது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பவர் இவரா
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக விஜய் டிவி பிரபலம் மோனிஷா பில்சி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.