அகோரியாக மாறிய விஜய் டிவி சீரியல் நடிகை! அவரா இப்படி
விஜய் டிவியின் சீரியல்களில் நடிப்பவர்கள் மற்றும் ஷோக்களில் பங்கேற்பவர்கள் சீக்கிரமே பாப்புலர் ஆகிவிடுகிறார்கள். அப்படி வேலைக்காரன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் நடிகை திவ்யா கிருஷ்ணன். தற்போது அவர் சன் டிவியின் அருவி சீரியலில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் காமெடியான ரீல்ஸ் வீடியோக்கள் பிரபலம். அதே நேரத்தில் அவர் தினம் ஒரு திருக்குறள் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட இவரை இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து வருகிறார்.

அகோரியாக மாற்றம்
தற்போது திவ்யா கிருஷ்ணன் அகோரியாக மாறி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
மஹா சிவராத்திரி வாழ்த்து சொல்ல தான் இப்படி அவர் அகோரி கெட்டப்புக்கு மாறி இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?