பிரதீப்பை Red Card கொடுத்து வெளியே அனுப்பிய பிக்பாஸ்- பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் நிகழ்ச்சியை சிலர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக பார்த்தாலும் பல கலைஞர்கள் தங்களின் எதிர்க்காலத்திற்கான ஒரு பாதையாக தான் பார்க்கிறார்கள்.
அப்படி சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் தான் பிரதீப். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆனால் இவரை வெளியேற்றியது மக்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை, பிக்பாஸ் குழுவினரையும் கமல்ஹாசன் அவர்களை சிலர் மோசமாக விமர்சனம் செய்தார்கள்.
பிரதீப் தனது சமூக வலைதளத்தில் கூட மீண்டும் வீட்டிற்கு அழைத்தால் வருவேன் என்பது போலவும் ஒரு டுவிட் போட்டிருந்தார், ஆனால் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்பது தெரியவில்லை.
புதிய வாய்ப்பு
ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் தற்போது பீரதீப்பிற்கு விஜய் டிவி ஒரு புதிய வாய்ப்பு கொடுத்திருப்பதாக தகவல வந்துள்ளது.
இயக்குனர் கனவோடு இருக்கும் பிரதீப்பை வெப் தொடர் இயக்க கதை கேட்டு இருக்கிறார்களாம், அதற்கான பணியில் தற்போது பிரதீப் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
