மீண்டும் இயக்குனர் ஆகும் நடிகர் தனுஷ்.. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி பிரபலம்

vijay tv ramar dhanush direction
By Kathick Mar 27, 2022 10:20 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தனுஷின் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் பா. பாண்டி. ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

மீண்டும் இயக்குனர் ஆகும் நடிகர் தனுஷ்.. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி பிரபலம் | Vijay Tv Popular Person Is Acting In Dhanush Movie

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்

பா. பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இதுவரை தனது இரண்டாவது படத்தை இயக்கவில்லை.

இந்நிலையில், விரைவில் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் ராமர்

இப்படத்தில், விஜய் டிவி மூலம் பிரபலமான, ராமர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று, நடிகர் ரோபோ ஷங்கர் KPY சப்பியன்ஸ் நிகழ்ச்சியில் உறுதியாக கூறியுள்ளார்.

மீண்டும் இயக்குனர் ஆகும் நடிகர் தனுஷ்.. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி பிரபலம் | Vijay Tv Popular Person Is Acting In Dhanush Movie

மேலும், தனுஷ் இயக்கவுள்ள இப்படத்தில் ரோபோ ஷங்கரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US