விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்.. 'ஐபோன் கூட வாங்கி தரேன்'!
புகழ்
விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி தற்போது சினிமாவிலும் நுழைந்து இருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்களில் ரசிகர்களை காமெடியால் ஈர்த்த அவர் தற்போது மிஸ்டர் Zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
அது மட்டுமின்று விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் '16 ஆகஸ்ட் 1947' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

போன் திருடிய நபர்..
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் சென்னைக்கு வேலை தேடி வந்த போது நடந்ததை கூறி இருக்கிறார் புகழ்.
"கையில் 100 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். முதல் நாளே ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி போனை திருடிக்கொண்டு சென்றுவிட்டார். அதன் பின் சென்னை புதுப்பேட்டையில் வெல்டிங் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன், அதன் பின் கார் கழுவுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தேன்."

"போனை இழந்துவிட்டேன், ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட மொபைல் கடைகளை திறந்து வைத்துவிட்டேன். போன் இழந்த அன்றே ஊருக்கு திரும்பி சென்றிருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்கமுடியாது."
"என்னிடம் செல்போன் திருடிக்கொண்டு சென்ற நபர், உயிரோடு இருந்தா வாங்க ஐபோன் கூட வாங்கி தரேன். நீங்க நல்லா இருக்கனும்" என புகழ் அந்த திருடனுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்த நடிகை