ராஜா ராணி 3 சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? புகைப்படம் இதோ
ராஜா ராணி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. பிரவீன் பென்னட் என்பவர் இயக்கிய இந்த சீரியலில் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடிகளாக இணைந்து நடித்திருந்தார்.
இந்த சீரியலில் நடிக்கப்போகும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா ராணி 1 வெற்றிகரமாக 2019ஆம் ஆண்டு நிறைவுபெற்ற நிலையில், ராஜா ராணி 2 2020ஆம் ஆண்டு துவங்கியது.
இந்த சீரியலில் சஞ்சீவிற்கு பதிலாக சித்து என்பவர் கதாநாயகனாக நடிக்க ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆல்யா மானசா சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரியா என்ட்ரி கொடுத்தார். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
ராஜா ராணி 3
இந்த நிலையில், ராஜா ராணி 3-காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், விரைவில் ராஜா ராணி 3 சீரியல் வருகிறது என குறிப்பிட்டு ஆல்யா மானசா - சஞ்சீவ் இருவரும் இயக்குனர் பிரவீன் பென்னட் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஹீரோ - ஹீரோயினாக சஞ்சீவ் - ஆல்யா மானசா நடிக்கப்போகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம் ராஜா ராணி 3 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
