அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனது 64வது படத்திற்காக இணைந்திருக்கிறார்.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் போலவே வேடமிட்டு ரீல்ஸ் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், சில சமயங்களில் அச்சு அசல் நடிகர், நடிகைகள் போலவே ஒருவர் இருப்பதை பார்க்கும்போது ஆச்சிரியமாக இருக்கும். இதைத்தான் உலகில் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்.
தேஜஸ் கௌடா
அப்படி, அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தவர்தான் சீரியல் நடிகை தேஜஸ் கௌடா. இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே நடிகர் அஜித்தை போலவே இருப்பார். இருவரும் ஒன்றாக நின்றாள், அண்ணன் தம்பி என்றுதான் அனைவரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு இருவரின் முகப்பொருத்தம் இருக்கும்.
அஜித்தை போலவே இருக்கும் நடிகர் தேஜஸ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படம்: