விஜய் டிவி டாப் சீரியலில் நாயகியாக நடிக்கும் நடிகைகளின் நிஜ வயது விவரம்...இதோ
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரை என ரசிகர்கள் நினைத்தாலே சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் தான் நியாபகம் வரும்.
சீரியல்களில் சன் டிவி ஒருபக்கம் கெத்து காட்டி வர இன்னொரு பக்கம் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் மாஸ் காட்டி வருகிறது. விஜய் டிவி சீரியல்களிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள்.

வயது விவரம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி உண்மை தெரிந்த மீனா எப்போது எல்லா உண்மையையும் வீட்டில் கூறப்போகிறார் என சண்டை போட்டு வருகிறார். இதில் மீனாவாக நடிக்கும் கோமதி ப்ரியாவிற்கு 29 வயது என கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியாக நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார் ஷாலினி. இவருக்கு 26 வயது இருக்கும் என்கின்றனர்.
அய்யனார் துணை, ரசிகர்கள் கொண்டாடும் மிகப்பெரிய தொடராக உள்ளது. இதில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் மதுமிதா. இவருக்கும் வயது 26 இருக்கும் எனப்படுகிறது.
மகாநதி, 4 சகோதரிகளின் கதையாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் லட்சுமி ப்ரியாவின் வயது 25 இருக்குமாம்.