மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இயக்குனர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தாய் செல்வம்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய மௌனராகம் 1, நாம் இருவரும் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியலை இயக்கியவர் தாய் செல்வம்.
மரணம்
இவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வந்தார். இந்நிலையில், இயக்குனர் தாய் செல்வம் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் தாய் செல்வம் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் தாய் செல்வத்தின் மறைவிற்கு ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்..
? உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022
ரீ ரிலீசான பாபா.. வசூல் எவ்வளவு தெரியுமா