விஜய் டிவியின் மூன்று முக்கிய சீரியல்கள் நேரம் மாற்றம்! பாரதி கண்ணம்மா ரசிகர்கள் ஷாக்
விஜய் டிவி
விஜய் டிவியில் தற்போது தொடர்ந்து புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் தற்போது சன் டிவி தொடர்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கயல் சீரியல் தான் தற்போது தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
விஜய் டிவி சன் டிவியுடன் போட்டியை சமாளிக்கும் வகையில் பல தொடர்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. மேலும் சில தொடர்களின் நேரங்களையும் அடிக்கடி மாற்றம் செய்து வருகின்றனர்.
நேரம் மாற்றம்
இந்நிலையில் வரும் திங்கள் முதல் மூன்று சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் இனி இரவு 10 மணிக்கு தான் வர போகிறது. சிறகடிக்க ஆசை தொடர் இரவு 9 மணிக்கும், மகாநதி தொடர் 9.30 மணிக்கும் வர இருக்கின்றன.
பாரதி கண்ணம்மா 2ம் சீசனுக்கு வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் தான் இந்த நேர மாற்றம் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது.
ரோபோ ஷங்கருக்கு என்ன தான் ஆச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன் ரசிகர்கள்