விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரப்போகும் பிரபல ஹிட் சீரியல்- வருத்தத்தில் ரசிகர்கள்
விஜய் டிவி
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு நிகராக இப்போது விஜய் டிவியிலும் தொடர்கள் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம் போன்ற தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது புதியதாக கிழக்கு வாசல் என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளனது, அடுத்தடுத்து புதிய தொடர்கள் வர இருக்கின்றனவாம்.
தற்போது ரசிகர்களுக்கு சோகம் தரும் ஒரு விஷயம் வந்துள்ளது. இளசுகளின் ஆதரவை பெற்ற காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
ஆனால் எப்போது என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஏன் முடிக்காதீர்கள் என வருத்தத்துடன் பதிவு செய்து வருகிறார்கள்.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?