13 வயதில் நடனத்தில் மிரட்டும் நடிகர் விஜய்.. பலரும் பார்த்திராத வீடியோ
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

GOAT திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் பார்த்திராத வீடியோ
நடிகர் விஜய் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருந்தார்.
[6OJSSD ]
அதே போல் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு விளையாட்டு எனும் திரைப்படத்தில் தனது 13 வயதிலேயே நடனத்தில் மிரட்டியுள்ளார் விஜய். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Born to Dance @actorvijay ! ?#TheGreatestOfAllTime #GOAT pic.twitter.com/4Ru8bNJglO
— Jiven ツ (@Vijay___Geek) May 30, 2024