வாரிசு
வாரிசு படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது. மொத்தமாக வாரிசு படத்தில் ஆறு பாடல்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் மீதம் இருக்கும் பாடல்களுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்.
அது மட்டுமின்றி வரும் சனிக்கிழமை, டிசம்பர் 24, மாலை ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. அதற்கான அறிவிப்பும் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
மாலை 4 மணிக்கு இந்த விழா தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
The stage is set for the BOSS to arrive ?#VarisuAudioLaunch is on Dec 24th from 4 PM onwards ❤️#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/FvGYchia9c
— Sri Venkateswara Creations (@SVC_official) December 21, 2022
நேரடி ஒளிபரப்பு?
இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியும் ட்விட்டரில் அதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் நேரடி ஒளிபரப்பு என குறிப்பிடவில்லை.
அதனால் ஷோ நேரடியாக ஒளிபரப்பாகுமா அல்லது வழக்கம் போல எடிட் செய்யப்பட்டு சில மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
All set for #Varisu Audio Launch nanba! Coming soon only on Sun TV!#VarisuAudioLaunch pic.twitter.com/5SG3A9szYr
— Sun TV (@SunTV) December 21, 2022
பிறந்தநாளில் ஷாக் ஆன தமன்னா! அப்படி என்ன நடந்தது