விஜய்யின் வாரிசு பட பட்ஜெட், OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம்- ரிலீஸிற்கு முன்னரே இத்தனை கோடி வசூலித்ததா?
வாரிசு திரைப்படம்
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபற்றி மற்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து இதுவரை நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்கள்.
இப்போது இவர்களது இயக்கத்திலும், தயாரிப்பிலும் விஜய்யின் வாரிசு படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த். சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என பலர் நடிக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.
பட வியாபாரம்
தற்போது படத்தின் வியாபாரம் குறித்து தகவல் வந்துள்ளது, ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இதோ அந்த தகவல், தமிழக மற்றும் மாநில உரிமை ரூ. 200 கோடி, OTT ரூ. 60 கோடி, சாட்டிலைட் ரூ. 50 கோடி, இந்தி உரிமை ரூ. 25 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ. 50 கோடி, படத்தின் இசை ரூ. 10 கோடி என சுமார் ரூ. 400 கோடி வரை படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஷ்யாமின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக், எங்கே வந்துள்ளார் பாருங்க

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
