விஜய்யின் வாரிசு
தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்க விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது.
படத்தின் கதை என்ன என்பது நமக்கு படத்தின் டிரைலர் பார்க்கும் போதே தெரிந்திருக்கும், குடும்பம் கலந்து எமோஷ்னல் கதையாக இருக்கும் என தெரிகிறது.
நாளை அதிகாலை 4 மணிக்கு இப்படம் வெளியாகிறது, ரசிகர்கள் இப்போதே படத்தை காண படு ஆர்வமாக இருக்கின்றனர்.

கேரளாவில் வாரிசு
விஜய்க்கு சென்னையை தாண்டி கேரளாவும் அவரது கோட்டை தான். அங்கு விஜய்யின் நிறைய படங்கள் செம ஹிட்டடித்துள்ளது, தமிழக ரசிகர்களை போல கேரளாவிலும் விஜய்க்கு பெரிய கட்அவுட் வைத்து எல்லாம் அசத்தியுள்ளனர்.
தற்போது வாரிசு திரைப்படம் கேரளாவில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற விவரம் வந்துள்ளது. அங்கு படம் 400 ஸ்கிரீன்களில் வெளியாவதாக தகவல் வந்துள்ளது.
#Vijay #Mahotsavam in #Kerala from tomorrow...#Pongal grand program in 400 screens ??#Varisu from tomorrow... pic.twitter.com/x99AhnwUJe
— AB George (@AbGeorge_) January 10, 2023
பல லட்சம் செலவில் அஜித்தின் கட் அவுட்டிற்கு தயாராகும் மாலை- வைரலாகும் வீடியோ