விஜய்யின் வாரிசு படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்- இத்தனை கோடியா?
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் வாரிசு படம் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளார்கள். காரணம் இதற்கு முன் தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் சரியான வசூலை பெறவில்லை, விமர்சனமும் மோசமாக வந்தது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா பெரிய அளவில் ஹிட்டானது, கடந்த ஜனவரி 1ம் தேதி நியூஇயர் ஸ்பெஷலாக ஆடியோ வெளியீட்டு விழாவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ப்ரீ புக்கிங்
படத்தின் பாடல்கள் வரை அனைத்தும் ரிலீஸ் ஆனது, ஆனால் டிரைலர் இன்னும் வரவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய விஜய் பெயர் ஒன்றே போதுமானதாக உள்ளது.
அதாவது டிரைலர் இன்னும் வரவே இல்லை, ஆனால் வெளிநாடுகளில் இதுவரை விஜய்யின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ. 1.65 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இந்த விவரம் கூட ஒரு சில இடங்களை வைத்தே கூறப்பட்டுள்ளதாம்.
இலங்கை பிரபலம் நடிகை மதுமிளாவை நியாபகம் இருக்கா?- அவரின் குழந்தையை பார்த்துள்ளீர்களா?