பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த விஜய் வர்மா.. ஒவ்வொரு நபரையும் வெளுத்து வாங்கிய வீடியோ
பிக் பாஸ்
இதோ இந்த வாரம் பூகம்பம் எனும் டாஸ்க் வைத்து பிக் பாஸ் வீட்டிற்கு இருக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தார் பிக் பாஸ்.
இந்த போட்டியில் தோற்றால் வைல்டு கார்டு எண்ட்ரியாக மூன்று பேர் வீட்டிற்குள் வருவார்கள் என அறிவித்திருந்தார்.
நடந்த மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே போட்டியாளர்கள் வெற்றிபெற்றதால் இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற, வைல்டு கார்டு எண்ட்ரியாக ஏற்கனவே வீட்டிலிருந்து வெளியேற போட்டியாளர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.
விஜய் வர்மா எண்ட்ரி
இதில் நேற்று ஆர்.ஜே. பிராவோ வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
வீட்டிற்குள் வந்தவுடனே ஒவ்வொரு போட்டியாளரையும் நன்றாக வெளுத்து வாங்கிவிட்டார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
#BiggBossTamil7
— Praveen (@pravveeen17) November 26, 2023
PROMO 3 ! pic.twitter.com/OSvedmeH60