தனுஷ் மற்றும் கார்த்தி படங்களால் விஜய் படத்திற்கு கிடைத்த குறைவான திரையரங்குகள் !
உச்ச நட்சத்திரம் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நதிச்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இன்று இவரின் புகழ் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம், பான் இந்தியளவில் வெளியாக இருக்கிறது.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஜய் மிகவும் மோசமான காலகட்டத்தில் இருந்தார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
காவலன் திரைப்படம்
அப்படி ஒரு காலகட்டத்தில் தான் விஜய் காவலன் திரைப்படம் வெளியானது, தொடர் தொலைவிகளுக்கு பின் விஜயின் காவலன் வெளிவர இருந்தது.
அப்போது அப்படத்துடன் தனுஷின் ஆடுகளம், கார்த்தியின் சிறுத்தை உள்ளிட்ட படங்களும் வெளியானது. விஜய்யின் காவலன் படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்ததாம்.
ஆனாலும் கூட காவலன் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று பெரிய வெற்றியடைந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முக்கிய பிரபலம் !