கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் செய்த விஷயம்- அவரது மகன் பகிர்ந்த தகவல்
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த், தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் பிரபலம்.
கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரை இறப்பை தாங்க முடியாத மக்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி பிரேமலதா அவர்கள் கூறியிருந்தார். விஜயகாந்த் அவர்கள் இறந்ததில் இருந்து பிரபலங்கள் பலரும் கேப்டன் குறித்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
மகன் பேச்சு
அண்மையில் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது, அதில் அவரது மகன்கள் இருவரும் கலந்துகொண்டார்கள். அப்போது விஜயபிரபாகரன் பேசும்போது ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்தார்.
சில யூடியூப் தளங்களில் விஜயகாந்த் பற்றி தவறான செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை, எங்கள் அப்பாவுக்கு கடைசி வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருந்துச்சு.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டில் வேலை செய்யும் குமார் அண்ணன், சோமு அண்ணன் இரண்டு பேரிடமும் அவருடைய பட பாடல்கள் எல்லாத்தையும் போட்டு கொடுக்க சொல்லி தாளம் போட்டு ரசித்துள்ளார்.
அவங்க சொன்ன பின்னர் சிசி டிவி பார்க்கும் போது தான் இதுவே எங்களுக்கு தெரியும் என எமோஷ்னலாக நிறைய விஷயங்கள் பேசியுள்ளார்.