விஜய்யின் புதிய படத்தில் நடித்துள்ளாரா விஜயகாந்த்.. சர்ப்ரைஸ்! ஆனால்
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார். இவருடைய மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டடு. விஜய் அரசியலுக்கு வந்தபின் சினிமாவில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த படம் என்றால் அது விருதகிரி தான். இதன்பின் தனது மகன் ஹீரோவாக நடித்த சகாப்தம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இதுமட்டுமின்றி உடல்நல குறைவு ஏற்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.
கேமியோ ரோலில் விஜயகாந்த்..?
ஆனால், இவர் இறப்பதற்கு முன் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இது செம சர்ப்ரைஸ் என ஒரு பக்கம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதற்க்குள் இது உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜயகாந்திடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது.