தளபதி விஜய்யின் திரைப்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த் !
விஜய்காக கேப்டன் விஜயகாந்த் செய்த விஷயம்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நேற்று முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தபடி இருந்தன.
அதுமட்டுமின்றி அவரின் பிறந்தநாள் ஸ்பேஷ்லாக அவர் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியிருந்தது. அந்த மூன்று போஸ்டர்களுக்கும் லைக்ஸ்களை குவித்திருந்தனர் ரசிகர்கள்.
மேலும் நடிகர் விஜய் திரைதுரைக்கு அறிமுகமாகி அவர் நடிப்பில் இரண்டாவதாக வெளியான திரைப்படம் செந்தூரபாண்டி. அப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தான் இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ஆம், இயக்குநர் SAC இப்படம் விஜய்யின் இரண்டாவது திரைப்படம் என்பதால் விஜயகாந்த சம்பளமே வாங்காமல் இப்படத்தில் நடித்திருந்தாராம். மேலும் மக்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்கில் 100 நாட்கள் ஒடியதாம்.
திடீரென தள்ளிப்போன பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட விழா ! என்ன காரணம் தெரியுமா?