விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு!! மருத்துவமனை அறிக்கை..
விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் மற்றும் பிரபல நடிகருமான விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18 ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நிலையில் பின்னடைவு
இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.