கஷ்டத்தில் திக்குமுக்காடி நின்ற தனுஷ் குடும்பம்.. ஓடி போய் உதவி செய்த கேப்டன் விஜயகாந்த்

By Kathick Dec 29, 2023 04:30 AM GMT
Report

கஷ்டத்தில் தனுஷ் குடும்பம்

தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா திரையுலகில் வந்த சமயத்தில் அவருக்கு பெரிதும் வசதி வாய்ப்பு எதுவுமே இல்லை.

அப்போது அவருடைய மகள் கார்த்திகா தேவிக்கு மருத்துவராக வேண்டும் என கனவு இருந்துள்ளது. சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் கார்த்திகா தேவியால் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியாமல் போய்விட்டது.

கஷ்டத்தில் திக்குமுக்காடி நின்ற தனுஷ் குடும்பம்.. ஓடி போய் உதவி செய்த கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth Helped Dhanush Family

கஸ்தூரி ராஜாவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தனியார் கல்லூரியிலும் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. இப்படியொரு சமயத்தில் நடிகர் விஜயகாந்த் எதர்ச்சியாக கஸ்தூரி ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார்.

விஜயகாந்த்தை மோசமாக மேடையில் பேசிய வடிவேலு! வரலாறு மறக்குமா.. இப்போது வைரலாக்கும் நெட்டிசன்கள்

விஜயகாந்த்தை மோசமாக மேடையில் பேசிய வடிவேலு! வரலாறு மறக்குமா.. இப்போது வைரலாக்கும் நெட்டிசன்கள்

ஓடி போய் உதவி செய்த விஜயகாந்த்

அப்போது கார்த்திகா தேவி அழுதுகொண்டு இருப்பதை பார்த்த விஜயகாந்த், கஸ்தூரி ராஜாவிடம் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சேரமுடியவில்லை என கூற, உடனடியாக கார்த்திகா தேவிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

கஷ்டத்தில் திக்குமுக்காடி நின்ற தனுஷ் குடும்பம்.. ஓடி போய் உதவி செய்த கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth Helped Dhanush Family

விஜயகாந்த் பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதில் இதுவும் ஒன்றாகும். விஜயகாந்த் தனக்கு உதவி செய்தது குறித்து தனுஷின் அக்கா கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மனம் உருகி பதிவு வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US