விஜயகாந்திற்கு சாப்பாடு கூட தரல.. இவ்ளோ கஷ்டங்களை சந்தித்தாரா கேப்டன்..
விஜயகாந்த்
வாட்டசாட்டமாக கம்பீரமாக காட்சியளித்த கேப்டன் விஜயகாந்த், சமீபகாலமாக சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது காண்போர் நெஞ்சை கலங்க செய்தது.
இந்த நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாப்பாடு கூட தரல..
இந்நிலையில் விஜயகாந்த் அளித்த பழைய பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், சினிமாவிற்கு வந்த புதிதில் என்னை பார்த்த துச்சமா தூக்கிருவாங்க. "கருப்பு இருக்க நீ ஏன் வார?ஏற்கனவே ஒருத்தர் இருக்கிறார்" என்று எல்லாரும் பேசுவாங்க.. ஒரு நாள் ஷூட்டிங்கில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, கதாநாயகன் வந்துவிட்டார் என்று சொல்லி என்னை சாப்பிடவிடாமல் செய்துவிட்டனர். சாப்பிட கூட விடமாட்டேங்கிறாங்களே என்று வருத்தப்பட்டதாக கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..
— தோழர் ஆதி (@RjAadhi2point0) December 28, 2023
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்! ???#RIPCaptainVijaykanth pic.twitter.com/zYchSXZ5GO