50 நாட்களில் விக்ரம் செய்த மாபெரும் வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையின் படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்தது.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனையை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் ஷேர் மட்டுமே சுமார் ரூ. 90 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் சாதனை
இந்நிலையில், இன்றுடன் விக்ரம் படம் வெளிவந்து 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 50 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 430 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.