50வது நாளிலும் வசூலில் மாஸ் காட்டும் கமல்ஹாசனின் விக்ரம்- இவ்வளவு மவுசா படத்திற்கு?

By Yathrika Jul 23, 2022 11:00 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என நிறைய நடிகர்கள் பட்டாளமே நடிக்க உருவாகி கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வெற்றியை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு குழு இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்தும், சூர்யாவிற்கு வாட்ச் பரிசளித்தும் வெற்றியை கொண்டாடினார்கள்.

படம் ஓடிடியிலும் கடந்த ஜுலை 8ம் தேதி ரிலீஸ் ஆனது.

50வது நாளிலும் வசூலில் மாஸ் காட்டும் கமல்ஹாசனின் விக்ரம்- இவ்வளவு மவுசா படத்திற்கு? | Vikram 50Th Day Celebration

50வது நாள் கொண்டாட்டம்

இப்படம் வெளியாகி நேற்றோடு 50 நாட்கள் ஆனது, அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் எல்லாம் வெளியானது. இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த ஷோ அனைத்தும் ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம். 50வது நாளிலும் படத்திற்கு மவுசு இருப்பதை திரையரங்க உரிமையாளர்களே பதிவு செய்துள்ளார்கள். 

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ- எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US