ஒரே நாளில் ரிலீஸ்.. எல்2 எம்புரான் படம் குறித்து நடிகர் விக்ரம் கருத்து
விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் இப்படம் உலகளவில் பாராட்டுகளை பெற்றது.
இதை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் படம் தான் வீர தீர சூரன் பார்ட் 2. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கருத்து
இப்படம் வரும் 27 - ம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " மலையாளத்தில் சாதனை படைக்கும் முதல் பான் இந்திய திரைப்படமாக 'எல்2 எம்புரான்' இருக்கும் என நம்புகிறேன். வீரதீரசூரனும் அதனுடன் திரைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் பிருத்விராஜ் தனுஷ் போன்று இயக்குநராக மாறி 'லூசிபர்' போன்ற படத்தை கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.