சீயான் விக்ரமின் சம்பளம் எவ்வளவு தெரியுமா, பத்திரிகையாளர் கூறிய தகவல்
விக்ரம்
நடிகர் சீயான் விக்ரம் தற்போது படத்தில் நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார்.
நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் கூறினார்கள். ஆனாலும் உலகளவில் பாராட்டுகளை பெற்றது.
இதை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் படம்தான் வீர தீர சூரன் பார்ட் 2. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படம் இம்மதம் இறுதியில் வெளிவரும் என கூறப்படுகிறது. இதன்பின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார்.
விக்ரம் சம்பளம்
இந்த நிலையில், நடிகர் விக்ரமை தங்களது திரைப்படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் வரிசையில் உள்ளனர். இதனால் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
ஆனால், இறுக்கி பிடித்து பேசினால் ரூ. 45 அல்லது ரூ. 40 கோடி சம்பளத்திற்கு கூட விக்ரம் ஓகே சொல்ல வாய்ப்புள்ளதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu
