Live Update : விக்ரம் இசை வெளியீட்டு விழா லைவ்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் வருகை தந்த ஒவ்வொரு பிரபலங்களும் கமல் ஹாசன் குறித்தும், விக்ரம் படம், பாடல்கள் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் குறித்தும் பேசியுள்ளார்கள்.
பா. ரஞ்சித் :
தான் அடுத்த கமல் ஹாசன் அவர்களை வைத்து படம் இயக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும், மதுரை பின்னணியில் இப்படம் உருவாகும் என்று கூறியுள்ளார். இதற்கு தொகுப்பாளினி டிடி ' வேஷ்டியை மடிச்சு காட்டிகிட்டு ஒரு படமா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பா. ரஞ்சித் ' ஏன் கோட் சூட் போட்டுக்கிட்டு இருக்க கூடாதா 'என்று கூறியுள்ளார்.
பார்த்திபன் :
அதிமுக அமைச்சர்கள் கூட அம்மாவை பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அனிருத் அம்மா அனிருத்தை 3 நாட்களாக பார்க்காமல் இருந்துள்ளார். அந்த அளவிற்கு அவர் கடின உழைப்புடன் வேலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்
உதயநிதி ஸ்டாலின் :
கமல் சாறை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கி விட்டீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். யார் மிரட்டினாலும் கமல் பயப்பட கூடியவர் கிடையாது என்று கூறியுள்ளார்
சிம்பு :
நான் எப்போதும் இறைவனுக்கு வணக்கம் என்று சொல்றேன்.. ஆனால் ஆண்டவரே இங்கு தான் இருக்கிறார்
அனிருத் :
விஜய்யின் மாஸ்டர் 50% லோகேஷ் படம்.. கமலின் விக்ரம் 100% லோகேஷின் சம்பவம்
லோகேஷ் கனகராஜ் :
எங்களுடைய முழு பெஸ்ட்டையும் விக்ரம் படத்தில் கொடுத்துள்ளோம் . இது உண்மையான வெற்றியாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி.
கமல் ஹாசன் :
அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் முக ஸ்டாலின். எப்படி என்று கேட்பார்கள். ரஜினி திரைத்துறையில் என்னுடைய போட்டியாளராக இருந்து கொண்டு நண்பராக இல்லையா. அது போல தான். என்று கூறியுள்ளார்.
மேலும், ரஞ்சித் அவர்கள் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு சென்றிருக்கிறார் அது விரைவில் நடக்க தான் போகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ் உடன் வெற்றி கூட்டணியும் தொடரும் என்றும் பேசியுள்ளார் கமல்.