பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய்யின் பீஸ்ட், விக்ரம் திரைப்படம் தான் இனி No.1..
புதிய வசூல் சாதனை
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் பேராதரவை பெற்று வருகிறது விக்ரம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
மேலும் அவர்களின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் செம மாஸ்ஸான திரைப்படமாக வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இதுவரை இல்லாதளவு புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் விக்ரம் திரைப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது UK-வில் விக்ரம் திரைப்படம் படைத்துள்ள மிக பெரிய சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அங்கு இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் பீஸ்ட் திரைப்படம் தான் £ 569,950 அதிக வசூலை குவித்த திரைப்படமாக திகழ்ந்து வந்தது.
இதனிடையே தற்போது விக்ரம் £ 591,251 வசூலை குவித்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது.

7 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படம் செய்துள்ள ஒட்டுமொத்த வசூல் ! எத்தனை கோடி தெரியுமா?