முக்கிய இடத்தில் விஜய்யின் பட வசூலை முந்திய விக்ரம், அடுத்து ரஜினியின் 2.0 தான்..
மாஸ்டர் பட வசூலை முந்திய விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே கடந்த ஜுன் 3 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியான திரைப்படம் விக்ரம்.
தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் கோலிவுட் தரப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் விக்ரம்.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போலவே விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது . இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களின் ஒட்டு மொத்த வசூலையும் முறியடிக்கும் படி விக்ரம் வசூலை குவித்து வருகிறது.
அதன்படி தற்போது ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முந்தி தற்போது விக்ரம் A$860k+ வசூலை தான் அங்கு அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாக மாறியுள்ளது.
இனி வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் 2.0 படத்தின் வசூலை முந்தி No.1 திரைப்படம் என்ற அந்தஸ்தை பெறும் என சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் ஒட்டுமொத்த காலெக்ஷனையும் முந்திய விக்ரம்! அஜித்தை பின்னுக்கு தள்ளிய கமல்..