சர்கார், மெர்சல், மாஸ்டர் என அனைத்து வசூலையும் 10 நாளுக்குள் முடித்த விக்ரம்..வசூல் சாதனை
கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம் விக்ரம். இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தை குறிப்பாக இளைஞர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர், அதிலும் 2கே கிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஜெனரேஷனுக்கு கமல் யார் என்று தெரிந்துவிட்டது.
இந்நிலையில் விக்ரம் படம் உலகளவில் பிரமாண்ட வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவை ஆண்டு வரும் விஜய்யின் பல படங்களின் வசூல் சாதனைகளை விக்ரம் முறியடித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் வரை அனைத்து இடங்களிலும் மெர்சல், சர்கார், மாஸ்டர் போன்ற படங்களின் வசூலை முறியடித்துள்ளது.
இன்னும் விக்ரமிற்கு முன்னால் பிகில், எந்திரன், கபாலி, 2.0 ஆகிய படங்களே உள்ளது.
இதையும் இந்த வார இறுதிக்குள் முறியடித்து 2.0-விற்கு அடுத்த இடத்தில் இப்படம் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.