4வது வாரத்திலும் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்யும் சாதனை- செம மாஸ்
நடிகர் கமல்ஹாசன் இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். காரணம் என்ன எல்லோருக்கும் தெரிந்தது தான், அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் விரைவில் ரூ. 400 கோடியை எட்டி இருக்கிறது, அந்த நாளை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தயாரிப்பு குழு பட வெற்றியை பரிசுகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள், விருந்து எல்லாம் கமல்ஹாசன் பலமாக கொடுத்தார், அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
4வது வார சாதனை
விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது, படம் வெற்றிகரமாக 4வது வாரத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதும் 25 நாட்களை கடந்தும் படம் 150 திரையரங்குகளுக்கு மேல் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
இந்த வெற்றியை போஸ்டர்களோடு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
