5 நாள் முடிவில் தமிழகத்தில் செம வசூல் வேட்டை நடத்திய விக்ரம்- முழு தகவல்
நடிகர் கமல்ஹாசன் இப்போது வெற்றியின் கொண்டாட்டத்தில் இருக்கிறார். காரணம் அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதால் 5 நாட்களும் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 5 நாட்களில் படம் ரூ. 200 கோடியை எட்டியது ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது, வரும் நாட்களில் வசூல் சாதனை படங்களின் லிஸ்டில் இப்படம் மூலம் நிறைய மாற்றங்கள் வரும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்திலேயே படம் ரூ. 100 கோடியை நெருங்க இருக்கிறது. ஜுன் 3ம் தேதி வெளியான இப்படம் 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 88 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம்.
படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து விக்ரம் படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு கார் பரிசளித்துள்ளனர்.
மருதாணி நிகழ்ச்சியுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்- கலக்கல் புகைப்படங்கள் இதோ