விஜய், அஜித்தை ஓரங்கட்டி ஆந்திராவில் மாஸ் காட்டும் கமல்! நான்கு நாளில் இத்தனை கோடி வசூலா
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்து இருக்கும் விக்ரம் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தியேட்டர்களில் தற்போது நல்ல வசூல் ஈட்டி வருகிறது. தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் முடிவில் விக்ரம் படம் 77 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது அந்திரா மற்றும் தெலுங்கானாவில் வந்திருக்கும் வசூல் பற்றிய விவரம் வெளிவந்திருக்கிறது.
4 நாட்களில் தெலுங்கு மாநிலங்களில் விக்ரம் படம் 15.7 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது. அதன் மூலமாக விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை ஆகிய படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்திருக்கிறது விக்ரம்.

மேலும் கர்நாடகத்தில் இந்த படம் 12.5 கோடி ரூபாய் நான்கு நாட்களில் வசூலித்து இருக்கிறது.